வெட்டை மாட்டி விடாப்பெருந் துன்பநோய் விளைவ தெண்ணிலர் வேண்டிச்சென் றேதொழுக் கட்டை மாட்டிக் கொள்வார்என வேண்டிப்பெண் கட்டை மாட்டிக் கொள்வார்தங் கழுத்திலே துட்டை மாட்டின் கழுத்தடிக் கட்டையோ துணிக்கும் கட்டைய தாம்இந்தக் கட்டைதான் எட்டை மாட்டி உயிர்விடக் கட்டைமேல் ஏறும் போதும் இழுக்கின்ற கட்டையே