வென்றிக் கொடிமேல் விடைஉயர்த்தார் மேலார் ஒற்றி யூரர்என்பால் சென்றிக் குளிர்பூ மாலையிட்டார் சேர்ந்தார் அல்லர் யான்அவரை அன்றிப் பிறரை நாடினனோ அம்மா ஒன்றும் அறியனடி குன்றிற் றுயர்கொண் டழும்எனது குறையை எவர்க்குக் கூறுவனே