வென்றே முதலையும் மூர்க்கரும் கொண்டது மீளவிடார் என்றே உரைப்பரிங் கென்போன்ற மூடர்மற் றில்லைநின்பேர் நன்றே உரைத்துநின் றன்றே விடுத்தனன் நாணில்என்மட் டின்றேயக் கட்டுரை இன்றேஎன் சொல்வ திறையவனே