வெப்பிலை யேஎனும் தண்விளக் கேமுக்கண் வித்தகநின் ஒப்பிலை யேஎனும் சீர்புக லார்புற்கை உண்ணுதற்கோர் உப்பிலை யேபொரு ளொன்றிலை யேஎன் றுளல்பவர்மேல் தப்பிலை யேஅவர் புன்தலை ஏட்டில் தவமிலையே