வெம்பெரு மானுக்குக் கைகொடுத் தாண்ட மிகுங்கருணை எம்பெரு மானுக்கு விண்ணப்பம் தேவர் இளம்பிடியார் தம்பெரு மானுக்கும் சார்மலை மானுக்கும் சாற்றுமைங்கைச் செம்பெரு மானுக்கும் எந்தாய்க்கும் நான்பணி செய்யச்செய்யே