வெய்ய வினையின் வேர்அறுக்கும் மெய்ம்மை ஞான வீட்டிலடைந் துய்ய அமல நெறிகாட்டும் உன்னற் கரிய உணர்வளிக்கும் ஐயம் அடைந்த நெஞ்சேநீ அஞ்சேல் என்மேல் ஆணைகண்டாய் செய்ய மலர்க்கண் மால்போற்றும் சிவாய நமஎன் றிடுநீறே
வெய்ய னாய்உல கழித்தலின் விசுவசங் காரி பைய மேலெனப் படுவன பலவற்றின் மேலாம் ஐயன் ஆதலிற் பராபர னாம்எனப் பட்ட செய்ய னாகிய சிவபிரான் ஒருவனுண் டமரீர்