வெய்யபவக் கோடையிலே மிகஇளைத்து மெலிந்த மெய்யடியர் தமக்கெல்லாம் விரும்புகுளிர் சோலைத் துய்யநிழ லாய்அமுதாய் மெலிவனைத்துந் தவிர்க்கும் துணையடிகள் மிகவருந்தத் துணிந்துநடந் தடியேன் உய்யநடு இரவினில்யான் இருக்குமிடத் தடைந்தே உயர்கதவந் திறப்பித்தங் குவந்தழைத்தொன் றளித்தாய் வையகமும் வானகமும் வாழமணிப் பொதுவில் மாநடஞ்செய் அரசேநின் வண்மைஎவர்க் குளதே