வெய்யலிலே நடந்திளைப்பு மேவியஅக் கணத்தே மிகுநிழலும் தண்ணமுதும் தந்தஅருள் விளைவே மையல்சிறி துற்றிடத்தே மடந்தையர்கள் தாமே வலிந்துவரச் செய்வித்த மாண்புடைய நட்பே கையறவால் கலங்கியபோ தக்கணத்தே போந்து கையறவு தவிர்த்தருளிக் காத்தளித்த துரையே ஐயமுறேல் என்றெனையாண் டமுதளித்த பதியே அம்பலத்தென் அரசேஎன் அலங்கல்அணிந் தருளே