வெருட்சி யேதரும் மலஇரா இன்னும் விடியக் கண்டிலேன் வினையினேன் உள்ளம் மருட்சி மேவிய தென்செய்கேன் உன்பால் வருவ தற்கொரு வழியும்இங் கறியேன் தெருட்சி யேதரும் நின்அருள் ஒளிதான் சேரில் உய்குவேன் சேர்ந்தில தானால் உருட்சி ஆழிஒத் துழல்வது மெய்காண் ஒற்றி மேவிய உலகுடை யோனே