வெறிபி டிக்கினும் மகன்தனைப் பெற்றோர் விடுத்தி டார்அந்த வெறியது தீரும் நெறிபி டித்துநின் றாய்வரென் அரசே நீயும் அப்படி நீசனேன் தனக்குப் பொறிபி டித்தநல் போதகம் அருளிப் புன்மை யாவையும் போக்கிடல் வேண்டும் செறிபி டித்தவான் பொழில்ஒற்றி அமுதே தில்லை ஓங்கிய சிவானந்தத் தேனே டீயஉம -------------------------------------------------------------------------------- காதல் விண்ணப்பம் திருவொற்றியூர் எழுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்