வெறுக்க மாட்டேன் நின்றனையே விரும்பிப் பிடித்தேன் துயர்சிறிதும் பொறுக்க மாட்டேன் உலகவர்போல் பொய்யிற் கிடந்து புரண்டினிநான் சிறுக்க மாட்டேன் அரசேநின் திருத்தாள் ஆணை நின்ஆணை மறுக்க மாட்டேன் வழங்குவன எல்லாம் வழங்கி வாழியவே