வெற்ப னேதிருத் தணிகை வேலவனே பொற்ப னேதிருப் போரி நாதனே கற்ப மேல்பல காலம் செல்லுமால் அற்ப னேன்துயர்க் களவு சாற்றவே