வெற்புறு முடியில் தம்பமேல் ஏற்றி மெய்ந்நிலை அமர்வித்த வியப்பே கற்புறு கருத்தில் இனிக்கின்ற கரும்பே கருணைவான் அமுதத்தெண் கடலே() அற்புறும் அறிவில் அருள்ஒளி ஆகி ஆனந்த மாம்அனு பவமே பொற்புறு பதியே அற்புத நிதியே பொதுநடம் புரிகின்ற பொருளே () தண்கடலே - படிவேறுபாடு ஆ பா