வெல்லு கின்றனர் வினைப்புல வேடர் மெலிகின் றேன்இங்கு வீணினில் காலம் செல்லு கின்றன ஐயவோ சிவனே செய்வ தென்னைநான் சிறியருள் சிறியேன் சொல்லு கின்றனன் கேட்கின்றாய் கேட்டும் தூர நின்றனை ஈரமில் லார்போல் புல்லு கின்றசீர் ஒற்றிஅம் பரனே போற்றும் யாவர்க்கும் பொதுவில்நின் றவனே