வெள்ளங்கொண் டோ ங்கும் விரிசடை யாய்மிகு மேட்டினின்றும் பள்ளங்கொண் டோ ங்கும் புனல்போல்நின் தண்ணருட் பண்புநல்லோர் உள்ளங்கொண் டோ ங்கும் அவமே பருத்த ஒதிஅனையேன் கள்ளங்கொண் டோ ங்கும் மனத்துறு மோஉறிற் காண்குவனே