வெள்ளச் சடையார் விடையார்செவ் வேலார் நூலார் மேலார்தம் உள்ளத் துறைவார் நிறைவார்நல் ஒற்றித் தியாகப் பெருமானர் வள்ளற் குணத்தார் திருப்பவனி வந்தார் என்றார் அம்மொழியை விள்ளற் குள்ளே மனம்என்னை விட்டங் கவர்முன் சென்றதுவே