வெள்ளமணி சடைக்கனியே மூவ ராகி விரிந்தருளும் ஒருதனியே விழல னேனைக் கள்ளமனக் குரங்காட்டும் ஆட்ட மெல்லாம் கண்டிருந்தும் இரங்கிலையேல் கவலை யாலே உள்ளமெலிந் துழல்கின்ற சிறியேன் பின்னர் உய்யும்வகை எவ்வகையீ துன்னுந் தோறும் பொள்ளெனமெய் வியர்க்கஉளம் பதைக்கச் சோபம் பொங்கிவழி கின்றதுநான் பொறுக்கி லேனே