வெள்ளம் குளிரும் சடைமுடி யோன்ஒற்றி வித்தகன்தன் உள்ளம் குளிரமெய் பூரிப்ப ஆனந்தம் ஊற்றெடுப்பத் தெள்ளம் குளிர்இன் அமுதே அளிக்கும்செவ் வாய்க்குமுத வள்ளம் குளிர்முத்த மானே வடிவுடை மாணிக்கமே