வெள்ளி மாமலை வீடென உடையீர் விளங்கும் பொன்மலை வில்எனக் கொண்டீர் வள்ளி யீர்என நும்மைவந் தடைந்தால் வாய்தி றந்தொரு வார்த்தையும் சொல்லீர் என்னில் எண்ணெய்போல் எங்கணும் நின்றீர் ஏழை யேன்குறை ஏன்அறி யீரோ ஒன்னி யீர்உமை அன்றிஒன் றறியேன் ஓங்கு சீர்ஒற்றி யூர்உடையீரே