வெள்விடை மேல்வரும் வீறுடை யானை வேதமு டிவினில் வீற்றிருந் தானைக் கள்விரை யார்மலர்க் கொன்றையி னானைக் கற்பகந் தன்னைமுக் கண்கொள்க ரும்பை உள்வினை நீக்கிஎன் உள்ளமர்ந் தானை உலகுடை யானைஎன் உற்றது ணையை எள்வினை ஒன்றும்இ லாதவன் தன்னை இன்றைஇ ரவில்எ திர்ந்துகொள் வேனே