வேட்டேன் நினது திருஅருளை வினையேன் இனிஇத் துயர்பொறுக்க மாட்டேன் மணியே அன்னேஎன் மன்னே வாழ்க்கை மாட்டுமனம் நாட்டேன் அயன்மால் எதிர்வரினும் நயக்கேன் எனக்கு நல்காயோ சேட்டேன் அலரும் பொழில்தணிகைத் தேவே ஞானச் செழுஞ்சுடரே