வேணிக்கண் நீர்வைத்த தேவே மதுரை வியன்தெருவில் மாணிக்கம் விற்றசெம் மாணிக்க மேஎனை வாழ்வித்ததோர் ஆணிப்பொன் னேதெள் ளமுதேநின் செய்ய அடிமலர்க்குக் காணிக்கை யாக்கிக்கொண் டாள்வாய் எனது கருத்தினையே