பாடல் எண் :176
வேத மாமுடி விளங்கும் நின்திருப்
பாதம் ஏத்திடாப் பாவி யேன்தனக்
கீதல் இன்றுபோ என்னில் என்செய்கேன்
சாதல் போக்கும்நல் தணிகை நேயனே
பாடல் எண் :1265
வேத னேனும்வி லக்குதற் பாலனோ
தீத னேன்துயர் தீர்க்கும்வ யித்திய
நாத னேஉன்றன் நல்லருள் இல்லையேல்
நோதல் நேரும்வன் நோயில்சி றிதுமே
பாடல் எண் :2013
வேத முடிவோ விளங்கா கமமுடிவோ
நாத முடிவோ நவில்கண்டாய் - வாதமுறு
மாசகர்க்குள் நில்லா மணிச்சுடரே மாணிக்க
வாசகர்க்கு நீஉரைத்த வாறு
பாடல் எண் :5241
வேத சிகாமணியே போத சுகோதயமே
மேதகு மாபொருளே ஓதரும் ஓர்நிலையே
நாத பராபரமே சூத பராவமுதே
ஞான சபாபதியே ஞான சபாபதியே
Dear sanmarges . You are welcome to register at FREE of cost.