வேதத்தின் முடிமிசை விளங்கும்ஓர் விளக்கே மெய்ப்பொருள் ஆகம வியன்முடிச் சுடரே நாதத்தின் முடிநடு நடமிடும் ஒளியே நவைஅறும் உளத்திடை நண்ணிய நலமே ஏதத்தின் நின்றெனை எடுத்தருள் நிலைக்கே ஏற்றிய கருணைஎன் இன்உயிர்த் துணையே தாதுற்ற உடம்பழி யாவகை புரிந்தாய் தனிநட ராசஎன் சற்குரு மணியே