வேதநெறி ஆகமத்தின் நெறிபவுரா ணங்கள் விளம்புநெறி இதிகாசம் விதித்தநெறி முழுதும் ஓதுகின்ற சூதனைத்தும் உளவனைத்தும் காட்டி உள்ளதனை உள்ளபடி உணரஉரைத் தனையே ஏதமற உணர்ந்தனன்வீண் போதுகழிப் பதற்கோர் எள்ளளவும் எண்ணம்இலேன் என்னொடுநீ புணர்ந்தே தீதறவே அனைத்தும்வல்ல சித்தாடல் புரிவாய் சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே