வேதனைச் சிறைக்குள் வேதனை படச்செய் விமலனை அமலனை அற்பர் போதனைக் கடங்காப் போதனை ஐந்தாம் பூதனை மாதவர் புகழும் பாதனை உமையாள் பாலனை எங்கள் பரமனை மகிழ்விக்கும் பரனைத் தரதனை உயிர்க்குள் உயிரனை யவனைத் தணிகையில் கண்டிறைஞ் சுவனே