வேதப் பொருளே சரணம் சரணம் விண்ணோர் பெருமாள் சரணம் சரணம் போதத் திறனே சரணம் சரணம் புனைமா மயிலோய் சரணம் சரணம் நாதத் தொலியே சரணம் சரணம் நவைஇல் லவனே சரணம் சரணம் காதுக் கினிதாம் புகழோய் சரணம் கந்தா சரணம் சரணம் சரணம் திருச்சிற்றம்பலம் பிரார்த்தனை மாலை கட்டளைக் கலித்துறை திருச்சிற்றம்பலம்