வேதமுதற் கலைகளெலாம் விரைந்துவிரைந் தனந்தமுறை ஓதஅவைக் கணுத்துணையும் உணர்வரிதாம் எம்பெருமான் பாதமலர் நினதுதிருப் பணிமுடிமேற் படப்புரிந்த மாதவம்யா துரைத்தருளாய் வன்தொண்டப் பெருந்தகையே