வேதமே விளங்க மெய்ம்மையே வயங்க வெம்மையே நீங்கிட விமல வாதமே வழங்க வானமே முழங்க வையமே உய்யஓர் பரம நாதமே தொனிக்க ஞானமே வடிவாய் நன்மணி மன்றிலே நடிக்கும் பாதமே பிடித்தேன் எனக்கிது போதும் பண்ணிய தவம்பலித் ததுவே