வேயை வென்றதோள் பாவையர் படுகுழி விழுந்தலைந் திடும்இந்த நாயை எப்படி ஆட்கொளல் ஆயினும் நாதநின் செயல்அன்றே தாயை அப்பனைத் தமரினை விட்டுனைச் சார்ந்தவர்க் கருள்கின்றோய் மாயை நீக்குநல் அருள்புரி தணிகைய வந்தருள் இந்நாளே திருச்சிற்றம்பலம் கருணை மாலை கலிவிருத்தம் திருச்சிற்றம்பலம்