வேற்றுமுகம் பாரேன்என்னோ டாடவா ரீர் வெட்கமெல்லாம் விட்டுவிட்டேன் ஆடவா ரீர் மாற்றுதற்கெண் ணாதிர்என்னோ டாடவா ரீர் மாற்றில்உயிர் மாய்ப்பேன்கண்டீர் ஆடவா ரீர் கூற்றுதைத்த சேவடியீர் ஆடவா ரீர் கொண்டுகுலங் குறியாதீர் ஆடவா ரீர் ஏற்றதனித் தருணமீதே ஆடவா ரீர் என்னுடைய நாயகரே ஆடவா ரீர் ஆடவா ரீர்