வேலைஅப் பாபடை வேலைஅப் பாபவ வெய்யிலுக்கோர் சோலைஅப் பாபரஞ் சோதிஅப் பாசடைத் துன்றுகொன்றை மாலைஅப் பாநற் சமரச வேதசன் மார்க்கசங்கச் சாலைஅப் பாஎனைத் தந்தஅப் பாவந்து தாங்கிக்கொள்ளே