வேல்கொண்ட கையும் விறல்கொண்ட தோளும் விளங்குமயில் மேல்கொண்ட வீறும் மலர்முகம் ஆறும் விரைக்கமலக் கால்கொண்ட வீரக் கழலும்கண் டால்அன்றிக் காமன்எய்யும் கோல்கொண்ட வன்மை அறுமோ தணிகைக் குருபரனே
வேல்கொண்ட கையுமுந் நூல்கொண்ட மார்பமும் மென்மலர்ப்பொற் கால்கொண்ட ஒண்கழற் காட்சியும் பன்னிரு கண்ணும்விடை மேல்கொண்ட செஞ்சுடர் மேனியும் சண்முக வீறுங்கண்டு மால்கொண்ட நெஞ்சம் மகிழ்வதெந் நாள்என்கண் மாமணியே