வைகிய நகரில் எழிலுடை மடவார் வலிந்தெனைக் கைபிடித் திழுத்தும் சைகைவே றுரைத்தும் சரசவார்த் தைகளால் தனித்தெனைப் பலவிசை அறிந்தும் பொய்கரைந் தாணை புகன்றுமேல் விழுந்தும் பொருள்முத லியகொடுத் திசைத்தும் கைகலப் பறியேன் நடுங்கினேன் அவரைக் கடிந்ததும் இல்லைநீ அறிவாய்