வைதிலேன் வணங்கா திகழ்பவர் தம்மை வஞ்சனேன் நின்னடி யவர்பால் எய்திலேன் பேயேன் ஏழையேன் என்னை என்செய்தால் தீருமோ அறியேன் கொய்துமா மலரிட் டருச்சனை புரிவோர் கோலநெஞ் சொளிர்குணக் குன்றே உய்திறம் உடையோர் பரவுநல் ஒற்றி யூர்அகத் தமர்ந்தருள் ஒன்றே