ஸோதிமணி யேஅகண் டானந்த சைதன்ய சுத்தமணியே அரியநல் துரியமணி யேதுரிய முங்கடந் தப்பால் துலங்குமணி யேஉயர்ந்த ஜாதிமணி யேசைவ சமயமணி யேசச்சி தானந்த மானமணியே சகஜநிலை காட்டிவினை யோட்டிஅருள் நீட்டிஉயர் சமரச சுபாவமணியே நீதிமணி யேநிரு விகற்பமணி யேஅன்பர் நினைவிலமர் கடவுண்மணியே நின்மல சுயம்பிர காசங்குலவும் அத்வைத நித்யஆ னந்தமணியே ஆதிமணி யேஎழில் அநாதிமணி யேஎனக் கன்புதவும் இன்பமணியே அற்புத சிதாகாச ஞானஅம் பலமாடும் ஆனந்த நடனமணியே