Vallalar.Net

Vallalar Songs

பாடல் எண் :2813
-) 
 கலிநிலைத் துறை
 
  உருத்தி ரன்திரு மால்அயன் ஒப்பமுக் குணமாய்
இருத்தல் இன்றிஅக் குணங்களை என்றும்ஆண் டருளுங்
கருத்தன் ஆகையிற் குணேசன்அக் குணவிகா ரத்திற்
பொருத்த மின்மையன் ஆகையால் புகல்குண ரகிதன்
பாடல் எண் :2817
-) 
 அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
 
  இரண்டே காற்கை முகந்தந்தீர் இன்ப நடஞ்செய் பெருமானீர்
இரண்டே காற்கை முகங்கொண்டீர் என்னே அடிகள் என்றுரைத்தேன்
இரண்டே காற்கை முகம்புடைக்க இருந்தாய் எனைக்கென் றிங்கேநீ
இரண்டே காற்கை முகங்கொண்டாய் என்றார் மன்றில் நின்றாரே()
பாடல் எண் :2964
-) 
 சிந்து
 
பல்லவி
 
  கொம்மிய டிப்பெண்கள் கொம்மி யடி - இரு
கொங்கைகு லுங்கவே கொம்மியடி 
 
 பல்லவி எடுப்பு

Dear sanmarges . You are welcome to register at FREE of cost.