இனிய நீறிடா ஈனநாய்ப் புலையர்க் கெள்ளில் பாதியும் ஈகுதல் ஒழிக இனிய நீறிடும் சிவனடி யவர்கள் எம்மைக் கேட்கினும் எடுத்தவர்க் கீக இனிய நன்னெறி ஈதுகாண் கரங்காள் ஈசன் நம்முடை இறையவன் துதிப்போர்க் கினிய மால்விடை ஏறிவந் தருள்வோன் இடங்கொண் டெம்முளே இசைகுநற் பொருட்டே