இயற்கையிலே பாசங்கள் ஒன்றும்இலார் குணங்கள் ஏதுமிலார் தத்துவங்கள் ஏதுமிலார் மற்றோர் செயற்கைஇல்லார் பிறப்பில்லார் இறப்பில்லார் யாதும் திரிபில்லார் களங்கம்இல்லார் தீமைஒன்றும் இல்லார் வியப்புறவேண் டுதல்இல்லார் வேண்டாமை இல்லார் மெய்யேமெய் ஆகிஎங்கும் விளங்கிஇன்ப மயமாய் உயத்தரும்ஓர் சுத்தசிவா னந்தசபை தனிலே ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர்உண்டே கண்டீர்