எண்உறும் அவர்கட் கருளும்நின் அடியை ஏத்திடா தழிதரும் செல்வப் புண்உறும் அவர்பால் எளியனேன் புகுதல் பொறுக்கிலன் பொறுக்கிலன் கண்டாய் கண்உறு மணியாம் நின்அடி யவர்பால் கலந்திடில் உய்குவன் கரும்பே தண்உறும் கருணைத் தனிப்பெருங் கடலே தணிகைவாழ் சரவண பவனே திருச்சிற்றம்பலம் வேட்கை விண்ணப்பம் அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் திருச்சிற்றம்பலம்