ஒப்பார் இல்லா ஒற்றிஅப்பா உன்னை மறந்தேன் மாதர்கள்தம் வெப்பார் குழியில் கண்முடி விழுந்தேன் எழுந்தும் விரைகின்றேன் இப்பார் நடையில் களித்தவரை ஈர்த்துக் கொடுபோய்ச் செக்கிலிடு விப்பார் நமனார் என்பதைநான் நினையா தறிவை விடுவித்தேனே