ஒளிவண்ணம் வெளிவண்ணம் என்றனந்த வேத உச்சியெலாம் மெச்சுகின்ற உச்சமல ரடிகள் அளிவண்ணம் வருந்தியிட நடந்தருளி அடியேன் அடைந்தவிடத் தடைந்துகத வந்திறக்கப் புரிந்து களிவண்ணம் எனைஅழைத்தென் கையில்வண்ணம் அளித்த கருணைவண்ணந் தனைவியந்து கருதும்வண்ணம் அறியேன் தெளிவண்ண முடையர்அன்பு செய்யும்வண்ணம் பொதுவில் தெய்வநடம் புரிகின்ற சைவபரம் பொருளே