சிற்சபையில் நடிக்கின்ற நாயகனார் தமக்குச் சேர்ந்தபுறச் சமயப்பேர் பொருந்துவதோ என்றாய் பிற்சமயத் தார்பெயரும் அவர்பெயரே கண்டாய் பித்தர்என்றே பெயர்படைத்தார்க் கெப்பெயர்ஒவ் வாதோ அச்சமயத் தேவர்மட்டோ நின்பெயர்என் பெயரும் அவர்பெயரே எவ்வுயிரின் பெயரும்அவர் பெயரே சிற்சபையில் என்கணவர் செய்யும்ஒரு ஞானத் திருக்கூத்துக் கண்டளவே தெளியும்இது தோழி