தருண நிதியே என்னொருமைத் தாயே என்னைத் தடுத்தாண்டு வருண நிறைவில் சன்மார்க்கம் மருவப் புரிந்த வாழ்வேநல் அருண ஒளியே எனச்சிறிதே அழைத்தேன் அழைக்கும் முன்வந்தே கருணை கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே