திருத்தகுசீர் அதிகைஅருள் தலத்தின் ஓங்கும் சிவக்கொழுந்தின் அருட்பெருமைத் திறத்தால் வாய்மை உருத்தகுமெய் உணர்ச்சிவடி வாகிச் சைவ ஒளிவிளங்க நாவரசென் றொருபேர் பெற்றுப் பொருத்தமுற உழவாரப் படைகைக் கொண்ட புண்ணியனே நண்ணியசீர்ப் புனித னேஎன் கருத்தமர்ந்த கலைமதியே கருணை ஞானக் கடலேநின் கழல்கருதக் கருது வாயே