தெள்அகத் தோங்கிய செஞ்சுட ரேசிவ தேசிகனே கள்அகத் தேமலர்க் காஆர் தணிகைஎங் கண்மணியே என்அகத் தேஉழன் றென்நின் றலைத்தெழுந் திங்கும்அங்கும் துள்அகத் தேன்சிரம் சேரும்கொ லோநின் துணைஅடியே