நயப்படும் ஓர்நின் அருளெனக் கின்றெனில் நாய்மனமென் வயப்படு மோதுயர் மண்படு மோநல்ல வாழ்வைஎன்னால் செயப்படு மோகுணம் சீர்ப்படு மோபவம் சேரச்சற்றும் பயப்படு மோமலம் பாழ்படு மோஎம் பசுபதியே