நாடல்செய் கின்றேன் அருட்பெருஞ் சோதி நாதனை என்உளே கண்டு கூடல்செய் கின்றேன் எண்ணிய எல்லாம் கூடிடக் குலவிஇன் புருவாய் ஆடல்செய் கின்றேன் சித்தெலாம் வல்லான் அம்பலம் தன்னையே குறித்துப் பாடல்செய் கின்றேன் எனக்கிது போதும் பண்ணிய தவம்பலித் ததுவே