பரைத்தனி வெளியில் நடம்புரிந் தருளும் பரமனே அரும்பெரும் பொருளே தரைத்தலத் தியன்ற வாழ்க்கையில் வறுமைச் சங்கடப் பாவியால் வருந்தி நரைத்தவர் இளைஞர் முதலினோர் எனையோர் நண்பன்என் றவரவர் குறைகள் உரைத்தபோ தெல்லாம் நடுங்கிஎன் னுள்ளம் உடைந்ததுன் உளம்அறி யாதோ