பேயினும் பெரியேன் செய்த பிழைகளுக் கெல்லை இல்லை ஆயினும் பொறுத்தாட் கொண்டாய் அம்பலத் தரசே என்றன் தாயினும் இனிய உன்றன் தண்அருட் பெருமை தன்னை நாயினுங் கடையேன் எந்த நலமறிந் துரைப்பேன் அந்தோ